பிச்சைக்காரன் 2’ ஸ்னீக் பீக் வெளியானது!

Published On:

| By Jegadeesh

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இன்று(மே16) வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, தயாரித்துள்ளார். மேலும், இசையமைப்பாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்த படத்தில் காவ்யா தப்பார், ராதாரவி, ஒய்.ஜி. மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதனிடையே, இந்த படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த ராஜ கணபதி என்பவரும் , பரணி என்ற உதவி இயக்குநரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இப்படத்தின் ரிலீசுக்கு தடை விதித்தார். இதனால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்த நிலையில், மே 19ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள இந்த படத்தில் இருந்து, ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ரூ.10 லட்சம் கொடுத்தது ஏன்?: பொன்முடி

செந்தில் பாலாஜிக்கு கடும் நெருக்கடி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share