‘பிச்சைக்காரன் 2’ ரிலீஸ் அப்டேட்!

Published On:

| By Kavi

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகி பின் கதாநாயகன் ஆனவர் விஜய்ஆண்டனி.

சசி இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் வணிக ரீதியாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் அடித்த படமாகும்.

ADVERTISEMENT

மிகச்சிறந்த கதை காலத்திற்கு ஏற்ற திரைக்கதை என்பதால் படம் வெற்றிபெற்றதை மறந்து ஹீரோவுக்காக படம் ஓடியது என்கிற பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

அதனால் விஜய்ஆண்டனி தனது சம்பளம் பத்துக்கோடி என இரண்டு கை விரல்களையும் உயர்த்தி காட்டினார்.

ADVERTISEMENT

பிச்சைக்காரன் படத்திற்கு பின் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நம்பியார், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன் என எல்லா படங்களும் வணிகரீதியாக தோல்வியை ஏற்படுத்தியது.

இதனால் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் படங்களின் உரிமைகளை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருவதால்  தயாரான படங்களை வெளியிடுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வெற்றிபெற்றால் இவரது நடிப்பில் தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகி இருக்கும்படங்கள், வியாபாரமாகவும், திரையரங்குகளில் வெளியிடவும் இயலும் என்ற நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தபடத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலம் பெற்று வரும் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

இராமானுஜம்

இலவச பேருந்து திட்டத்தால் திமுக ஆட்சிக்கு புகழ்: முதல்வர் ஸ்டாலின்

மதுரையில் ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share