இஸ்ரேல் – ஈரான் மோதல்… பெட்ரோல், டீசல் விலை உயரும் ஆபத்து?

Published On:

| By Minnambalam Desk

petrol diesel price will hike due to israel iran war

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மிகப்பெரிய இராணுவ மோதல் இன்று (ஜூன் 13) காலை முதல் நடைபெற்று வருகிறது. petrol diesel price will hike due to israel iran war

ஈரானின் அணு மற்றும் ஏவுகணை மையங்களை இலக்காகக் கொண்டு, “Operation Rising Lion” என்ற பெயரில் இஸ்ரேல் முன்னெச்சரிக்கை தாக்குதலை இன்று அதிகாலை மேற்கொண்டது.

இந்த தாக்குதலில், 200 இஸ்ரேலிய விமானங்கள் 330க்கும் மேற்பட்ட ஆயுதங்களை 100 இலக்குகள் மீது வீசின.

இதில், ஈரானின் புரட்சிகரப் படையின் (IRGC) தலைவர் ஹோசெயின் சலாமி, இராணுவத் தளபதி முகம்மது பாகேரி, மற்றும் மூத்த அணு விஞ்ஞானிகள் பலர் உயிரிழந்தனர்.

ஈரான் இதற்கு பதிலடியாக 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இஸ்ரேலின் மீது ஏவியது.

அவற்றில் சில ஈராக் மற்றும் ஜோர்டானில் நடுவானிலேயே தடுக்கப்பட்டன. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமினி, “கடுமையான தண்டனை” அளிப்பதாக இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்த தாக்குதலால், இரு நாடுகளும் தங்களது வான்வழி போக்குவரத்தைக் மூடியது.

இந்த பதட்டத்தின் காரணமாக உலக கச்சா எண்ணெய் விலைகளில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) எனப்படும் முக்கியமான கச்சா எண்ணெயின் விலை ஒரே நாளில் 13% வரை உயர்ந்தது.

ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 6200 வரை உயர்ந்துள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் பெட்ரோல், டீசல் விலையும், பிற பொருட்களின் விலையும் உயரும் வாய்ப்புகள் உள்ளது.

மேலும் எதிர்காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை 120 டாலர் வரை போகும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இஸ்ரேலின் நடவடிக்கையில் தாங்கள் நேரடியாக ஈடுபடவில்லை என்றும், மோதல் தவிர்க்கும் வகையில் இரு நாடுகளும் தங்களது நடவடிக்கைகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த மோதலால், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார சூழலில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share