பெட்ரோல் டீசல், சிலிண்டர் விலை : மக்களின் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!

Published On:

| By Kavi

Petrol diesel cylinder prices hike

சமையல் சிலிண்டர் விலையை மத்திய அரசு இன்று (ஏப்ரல் 7) உயர்த்தியுள்ளது. Petrol diesel cylinder prices hike

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று(ஏப்ரல் 7) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

“எல்.பி.ஜி சமையல் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்படுகிறது. இதனால் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூ.500லிருந்து ரூ.550 ஆகவும், மற்றவர்களுக்கு ரூ.803 இலிருந்து ரூ.853 ஆகவும் உயரும்” என்று தெரிவித்தார்.

இதற்கும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரிக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்த அவர், கலால் வரி உயர்வு என்பது எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு எரிவாயு இழப்பாக ஏற்பட்ட ரூ.43,000 கோடியை ஈடு செய்வதை நோக்கமாக கொண்டது என்றும் கூறினார்.

முன்னதாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 என்ற அளவில் மத்திய அரசு அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது.

தொடர்ந்து சமையல் சிலிண்டர் விலையும் அதிகரித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Petrol diesel cylinder prices hike

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share