பெருசு – ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா?

Published On:

| By christopher

perusu ott release date announced apr 11

இளங்கோ ராமநாதன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பெருசு திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. perusu ott release date announced apr 11

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சு நிறுவனத்தின் தயாரிப்பில், கடந்த மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘பெருசு’ திரைப்படம்.

ADVERTISEMENT

இப்படத்தில் வைபவ், நிஹாரிகா, சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, தீபா, கருணாகரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பாலியல் பிரச்சனையுடன் உயிரிழந்த முதியவரின் இறுதிச்சடங்கை அடிப்படையாக கொண்டு காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.

ADVERTISEMENT

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பெருசு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share