தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைத் தேர்வில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்து ஒருவர் பரீட்சை எழுதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவராக இருப்பவர் பாஸ்கர். இவர் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் இளங்கலை அரசியல் அறிவியல் பட்டம் பெற விண்ணப்பித்திருந்தார்.
தற்போது 2-ம் ஆண்டுக்கான தேர்வு திருவாரூர் திரு.வி.க அரசுக் கல்லூரியில் நடந்து வருகிறது. இன்று (ஆகஸ்ட் 13) 5-வது தேர்வு நடந்தது. அப்போது திவாகர் மாதவன் என்பவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை பிடித்து விசாரித்தபோது அந்த நபர் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கருக்கு பதிலாக தேர்வு எழுத வந்தவர் என்பது தெரிய வந்தது.

திறந்தநிலை பல்கலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இல்லாததை பயன்படுத்தி அவர் இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்.
இந்தநிலையில் வருகைப் பதிவேட்டில் இருந்த புகைப்படத்துடன் திவாகர் மாதவன் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது அவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து திவாகர் மாதவனிடம் விசாரணை நடந்து வருகிறது.
கலை.ரா
கிரிக்கெட் மட்டையுடன் ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கம்!
