ADVERTISEMENT

தவெக மாநாட்டுக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published On:

| By Kavi

தவெக மாநாட்டுக்கு சென்று கொண்டிருந்த தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தவெக 2 ஆவது மாநாடு மதுரை பாரபத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் வரவேற்புரையாற்றி வருகிறார்.

ADVERTISEMENT

இதற்கிடையே மாநாட்டுக்கு சென்று கொண்டிருந்த தவெக தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர், சென்னை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் இருந்து புறப்பட்ட பிரபாகரன், மதுரை சக்கிமங்கலம் என்ற இடத்தில் சிறுநீர் கழிக்க சென்றபோது மயக்கமடைந்தார். அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாநாட்டுக்கு வருகைத் தந்தவர்களில் 200க்கும் அதிகமானோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலர் ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share