சதுரகிரிக்குச் செல்ல அனுமதி!

Published On:

| By Kavi

ஆனி மாத  பெளர்ணமி வழிபாட்டை முன்னிட்டு  சதுரகிரி மலை கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மாதந்தோறும் பெளர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஆனி மாத பெளர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள்  (ஜூலை 4ஆம் தேதி) வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

இதில் 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. 

ADVERTISEMENT

மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக் கோயிலில் தங்க அனுமதி இல்லை என்பது உட்பட  பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. இந்த அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

ADVERTISEMENT

”செந்தில்பாலாஜியால் கரூருக்கு தலைகுனிவு”: அண்ணாமலை

சிதம்பரம் கோவில் விவகாரம்: தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share