நடிகரும் தவெக தலைவருமான விஜய் திருப்பூரில் நாளை பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நாளை திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை மாலை 4 மணியளவில் திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
பின்னர் மாலை 6 மணியளவில் பெருமாநல்லூரில் இருந்து அவிநாசி புதிய பேருந்து நிலையம் வரை விஜய் ரோடு ஷோ செல்ல உள்ளார்.










