இயக்குநர் பேரரசுக்கு விருது… திடீர் அதிர்ச்சி கொடுத்த நித்தியானந்தா!

Published On:

| By christopher

இயக்குனர் பேரரசுக்கு ’கைலாசா தர்ம ரட்சகர்’ விருதை நித்தியானந்தா வழங்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு ஆளான நித்தியானந்தா தலைமறைவானார்.

ADVERTISEMENT

பின்னர் கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி சிலவருடங்களுக்கு முன்பு நித்தியானந்தா அறிவித்தார். அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றி வருகிறார்.

தர்மத்தின் பாதுகாவலர் விருது!

ADVERTISEMENT

இந்நிலையில், திடீரென இயக்குநர் பேரரசின் ஆன்மீக பணிக்காக கைலாசாவிலிருந்து ‘கைலாச தர்ம ரட்சகா’ விருது வழங்கப்படும் என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

தீபாவளியை ஒட்டி வழங்கப்பட்ட இந்த விருது குறித்து, நேரலையில் பேசிய நித்தியானந்தா,

ADVERTISEMENT

”திருவண்ணாமலை என்ற பெயராலேயே ஒரு மிகப்பெரிய வெற்றிப்படத்தை அளித்திருக்கிறீர்கள். இந்து மதத்திற்காக குரல் கொடுக்கின்ற, களம் காண்கின்ற உங்களது பணிகளை நன்கு அறிவேன்.

perarasu got award from nithyana Nithyananda

சிவகாசி, திருவண்ணாமலை, திருப்பதி என்று உங்களுடைய எல்லா படத்தின் பெயர்களுமே ஆன்மீக ஸ்தலங்களின் பெயர்களாக தான் இருக்கும்.

பேரரசுவின் இந்து மத பணிகளுக்கு நானும், கைலாசமும் என்றும் அவருக்கு ஆதரவாக இருப்போம் என்று நித்தியானத்தா தெரிவித்துள்ளார்.

பேரரசின் ஹிட் படங்கள்!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநராக திகழ்ந்தவர் பேரரசு. விஜய், அஜித், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் இவர் இயக்கிய திரைப்படங்கள் மக்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை பெற்றன.

கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த சாம்ராஜ்யம் 2 என்ற படத்தை இயக்கி பேரரசு நடித்திருந்தார். அதன் பின்னர் இயக்குநராக சினிமா பக்கம் சேராமல் ஒதுங்கியே இருந்து வருகிறார்.

perarasu got award from nithyana Nithyananda

பாஜகவில் இணைந்தார்!

கடந்த 2020ம் ஆண்டு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் பேரரசு.

அதன்பின்னர் பாஜகவிற்கு ஆதரவாக பேரரசு பல மேடைகளில் தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, முன்னாள் முதல்வர் காமராஜருடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இயக்குனர் பேரரசுக்கு தற்போது நித்யானந்தா விருது வழங்கி பாராட்டி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

3 நாட்களில் மட்டும் 211 டன் பட்டாசுக் கழிவுகள்… என்ன செய்ய போகிறது சென்னை மாநகராட்சி?

‘ஹரிஜன்’ என கூறக்கூடாது என்பது ஆளுநருக்குத் தெரியாதா?” – திருமாவளவன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share