பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் ரவுடி அழகுராஜ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து ரவுடி வெள்ளை காளியை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் கடந்த 24-ந் தேதி அழைத்து சென்றனர். அப்போது பெரம்பலூர் அருகே, போலீஸ் வாகனம் மீது ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெள்ளை காளியை வெட்டி கொலை செய்ய முயன்றது. ஆனால் போலீசார் இந்த கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
மேலும் இக்கொலை முயற்சியில் ஈடுபட்ட மதுரை ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்களை பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கும்பலைச் சேர்ந்த மதுரை ரவுடி அழகுராஜா, பெரம்பலூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அழகுராஜாவை சுற்றி வளைத்தனர்.
ஆனால் அழகுராஜா, போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்ப முயன்றார். இதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த என்கவுண்ட்டரில் ரவுடி அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
