விஜயகாந்த் விருந்தை புறக்கணித்த மக்கள் நலக் கூட்டணியினர்!

Published On:

| By Balaji

‘கேப்டன் உங்கள சந்திக்கத்தான் நாங்க வருகிறோம்’ வைகோ கூற, ‘வாங்கண்ணே உங்களுக்காக விதவிதமா விருந்து சமைச்சு வச்சுருக்கோம். வாங்க’ என்று அழைப்பு விடுத்துள்ளார் விஜயகாந்த். அடுத்த சில மணித்துளிகளில் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் விஜயகாந்தைச் சந்தித்தனர்.

சம்பிரதாய நல விசாரிப்புக்குப் பிறகு ‘ கட்சிய விட்டு சிலர் திமுக-வுக்குப் போனதா கேள்விப்பட்டோம். அத பெருசா எடுத்துக்காதிங்க. என் கட்சியிலயும்தான் பலர் போனாங்க. ஆனா, அவங்கள நம்பியா இருக்கேன். தொண்டர்களை நம்பித்தான் இருக்கேன். அப்படிப்பட்ட தொண்டர்கள்தான் கேப்டனுக்கும் பலம்’ என, வைகோ ஆறுதல் கூற, ‘ம் அத நான் பெருசா எடுத்துக்கலை’ என்றார் விஜயகாந்த்.

‘அப்படியென்றால் நல்லது’ என்ற வைகோ, ‘நாங்க போட்டியிடுற 110 தொகுதிகளுக்கான பட்டியல் இந்தாங்க’ என்று கொடுக்க, அதைப் பார்த்த விஜயகாந்த் ‘இதுல நாங்க போட்டியிடுற 70 தொகுதிகள் வருதே’ என்று சொல்லியுள்ளார். இதைக் கேட்டதும் ஜி.ஆர். அப்சட். இறுக்கமான திருமாவளவனோ ‘இதுல பெரும்பாலும் ரிசர்வ் தொகுதிகள்தான். அதையும் நீங்களே எடுத்துக்கிட்டா நாங்க என்ன பண்றது?’ என்று சொல்ல வைகோவும், முத்தரசனும் இதையே கூறி ‘பரிசீலியுங்க’ என்று கூறியுள்ளனர் அழுத்தமாகவே. ‘பார்க்கலாம்’ என்று சொல்லியுள்ளார் விஜயகாந்த். தொகுதிப் பட்டியலில் உடன்பாடு வராததால் விருந்தை சுவைக்காமலே திரும்பினர் மக்கள் நலக் கூட்டணியினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share