தாலி எடுத்துக் கொடுத்த ஸ்டாலின்… அதிர்ச்சி அடைய வைத்த கோஷம்… நடந்தது என்ன?

Published On:

| By vanangamudi

people shouted MGR Jayalalitha

இரண்டு நாள் பயணமாக கடலூர் சென்ற முதல்வர் ஸ்டாலின், நேற்று (பிப்ரவரி 22) காலையில் வேப்பூர் அருகே, நடத்தப்பட்ட பெற்றோரைக் கொண்டாடுவோம் நிகழ்விற்கு நெய்வேலியில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்டார். people shouted MGR Jayalalitha

அப்போது பொதுமக்கள் வழிநெடுகிலும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்று பெண்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பையும் ஏற்றுக்கொண்டார்.

அப்போது தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஜோடியுடன் சாலையோரம் நின்றிருந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 60 பேர், ”ஸ்டாலின் ஐயா, கல்யாணம் பண்ணி வைங்க” என குரல் எழுப்பினர்.

அதனைக் கேட்டு அவர்கள் பக்கம் வந்த ஸ்டாலினும் மகிழ்ச்சியுடன் தாலி எடுத்துக்கொடுத்தார். மணமகன், மணப்பெண்ணுக்கு தாலிகட்டினார். அப்போது அவர்களை சுற்றி இருந்த நரிக்குறவ மக்கள், “எம்.ஜி.ஆர் வாழ்க, அம்மா வாழ்க” என கோஷமிட்டனர். இவை எல்லாமே ஓரிரு நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டன.

நரிக்குறவ மக்களின் கோஷத்தைக் கேட்டு சில நிமிடங்கள் ஸ்டாலின் ஷாக் ஆகிப் போனார். அவருடன் வந்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோரும் திடுக்கிட்டனர். ஆனால் சுற்றிலும் கூட்டம் இருந்ததால், செய்தியாளர்களும் தொடர்ந்து வந்ததால், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தாமல் கடந்து சென்றனர்.

மிக பிரம்மாண்டமாக வரவேற்பு அளித்த நிலையில், திருஷ்டி மாதிரி இப்படி ஆகிவிட்டதே என அமைச்சர்கள் எம்.ஆர்.கே.வும், கணேசனும் வருத்தப்பட்டனர். திமுகவின் கூட்டத்தில் புகுந்து அதிமுகவினர் சதி செய்துவிட்டனரா என்று தனது ஆதரவாளர்களிடம் விசாரிக்குமாறு உத்தரவிட்டார் அமைச்சர் எம்.ஆர்.கே.

இதையடுத்து நரிக்குறவ மக்களின் வடக்கு சேப்லநத்தம் கிராமத்துக்கு சென்றனர் அமைச்சர் எம்.ஆர்.கே.வின் ஆதரவாளர்கள். அவர்களை கண்டதும், கல்யாணம் பண்ணி வைத்ததற்கு மொய், சீர்வரிசை கொடுக்க வருகிறார்கள் என நினைத்து, ‘வாங்க சாமீய்… வாங்க சாமீய்…’ என வரவேற்றிருக்கிறார்கள் அந்த மக்கள். அவர்களை சமாளித்து, ”எங்க தலைவருக்கு எதிர்ல உங்களுக்கு இப்படி கோஷம் எழுப்ப யார் சொல்லி கொடுத்தாங்க?” என விசாரித்தனர்.

அதற்கு அம்மக்கள், “இங்கு மொத்தம் 35 குடும்பம், 100 ஓட்டுகள்’ இருக்குங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி திமுக முன்னாள் கம்மப்புரம் ஒன்றிய திமுக காரர் செந்தமிழ்செல்வன் தான் எங்களை ஸ்டாலின் ஐயாவை வரவேற்க கூப்பிட்டாரு. அப்ப அவரிடம், ஊர்மக்கள் சார்பில், எங்க நரிக்குறவ சங்கத் தலைவர் காபிதுரை மற்றும் செயலாளர் மணி எல்லாரும் முக்கிய கோரிக்கை வச்சாங்க.

அது என்னான்னா… எங்க ஊர் பையன் சுரேஷுக்கு (24) அம்மா, அப்பா இல்லை. வடிவுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான் இருக்காங்க. அவங்களுக்கு கல்யாணம் செய்ய முடிவு செஞ்சோம். ஆனா, சீர் செய்ய எங்களுக்கு வசதியில்லை. அதனால இவங்க கல்யாணத்தை ஸ்டாலின் ஐயா நடத்திவச்சா கிராமம் பூரா தெரண்டு வர்றோம்னு கோரிக்கை வச்சோம். அவரும் சரினு சொல்லிவிட்டு கிளம்பிட்டாரு.

அவர்தான் இன்னிக்கு எங்களைக் கூட்டிட்டு போனாரு. ஸ்டாலின் ஐயா தாலி எடுத்து கொடுத்ததும், பழக்கத்தோஷத்துல “எம்.ஜி.ஆர் வாழ்க, அம்மா ஜெயலலிதா வாழ்க” னு சத்தம் போட்டுட்டோம். எங்க அப்பா, அம்மா எல்லோரும் அதிமுக கட்சிக்காரங்க. அதான் அப்படி சொல்லிட்டோம். மத்தபடி எங்க ஓட்டுலாம் சூரியனுக்கு தாங்க” என்று தெரிவித்துள்ளனர்.

இதனை தனது ஆதரவாளர்களிடம் கேட்டறிந்த எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் முதல்வரிடமும் இந்த பின்னணியை எடுத்துச் சென்றிருக்கிறார் என்கிறார்கள் கடலூர் மாவட்ட திமுகவினர். people shouted MGR Jayalalitha

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share