நெல்லையில் மாமன்னன் திரைப்படத்தை நரிக்குறவர்கள் இன மக்கள் கண்டு ரசித்தனர்.
நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஆகியோர் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. நெல்லையில் உள்ள ராம் திரையரங்கில் மாமன்னன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்று காலை 11:30 மணி காட்சிக்கு நெல்லை நரிக்குறவர் காலனியில் வசிக்கக்கூடிய நரிக்குறவர் இன மக்கள் சுமார் 50 பேர் ஒன்றாகத் திரண்டு தியேட்டருக்கு வந்து மாமன்னன் திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.
படத்தை பார்த்த பின்பு உரிமைக்காக போராடுவது , வடிவேலுவின் நடிப்பு, எந்த இடத்திலும் தங்களது உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என சமூக நீதிக்கான படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று நரிக்குறவர் இன மக்கள் கருத்து தெரிவித்தனர்.
படத்தில் அப்பாவுக்காக உதயநிதி சண்டை போட்டது, இறுதியாக வடிவேலு வெற்றி பெற்றது உள்ளிட்ட காட்சிகள் தங்களுக்கு பிடித்ததாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
இந்தியாவில் முதல்முறை: AI தொழில்நுட்பத்தில் கலக்கும் செய்தி வாசிப்பாளர்!
