குப்பையில் உணவு தேடி அலையும் காசா மக்கள் : உலகை உலுக்கும் துயரம்!

Published On:

| By christopher

People of Gaza searching for food in the garbage

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் அத்துமீறிய போர் தாக்குதலால், கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, குப்பையில் இருந்து உணவு எடுத்து சாப்பிடும் நிலைக்கு பாலஸ்தீன மக்கள் தள்ளப்பட்டுள்ளது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. People of Gaza searching for food in the garbage

பாலஸ்தீன நாட்டில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு கடந்த 2023ஆம் ஆண்டு இஸ்ரேல் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டு ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் மீது ஏவுகணைகள் வீசி போர் தாக்குதல் நடத்தி வருகிறது.

காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை 61,700க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 122,966 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. People of Gaza searching for food in the garbage

இஸ்ரேல் தொடர் தாக்குதல்! People of Gaza searching for food in the garbage

சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், இஸ்ரேல் ராணுவம் டிரோன் மூலம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று கூட காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 81 பேர் கொல்லப்பட்டதாக அங்குள்ள மருத்துவ வட்டாரங்கள் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளன.

இதில் கொடூர காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூட போதிய மருந்துகள் இல்லை.. காசாவில் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பெரும் துன்பத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காசாவில் தற்போது கடும் உணவுத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை இன்று வெளியான ஒரு புகைப்படம் வெட்ட வெளிச்சமாக உலகிற்கு உணர்த்தியுள்ளது.

ஐந்து குழந்தைகளின் தாயான 40 வயது இஸ்லாம் அபு தைமாவும் அவரது 9 வயது மகள் வேடும் காசா நகரில் உள்ள குப்பைக் குவியலில் உணவுத் தேடும் காட்சி தான் அது.

ஏவுகணையால் அழிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தின் அருகே இருக்கும் குப்பைக் குவியலில் இருந்து ஒரு ரொட்டித் துண்டை அவர் எடுக்கும் காட்சிகள் வெளியாகி பலரையும் உலுக்கியுள்ளது.

பின்னர் இதுதொடர்பாக ஊடகத்திற்கு அவள் அளித்தப் பேட்டியில், ”இந்த குப்பையில் இருந்து எடுத்த ரொட்டித் துண்டைத் தான் வேகவைத்து, எனது ஐந்து குழந்தைகளுக்கு வழங்குவேன்” என்று கூறியுள்ளார்.

பட்டினி நோய் தான் அதிகம் வதைக்கிறது!

மேலும் அவர், “நான் காசாவில் உள்ள அல்-குட்ஸ் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளேன். ஆனாலும் எனக்கு வேறு வழியில்லை. இங்கே ஒவ்வொரு நாளும் நாங்கள் பசியால் சாகிறோம். நாங்கள் சாப்பிடவில்லை என்றால், இறந்துவிடுவோம். இங்கே சிறிய உணவு கூட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலம் உணவு பெற போராடினாலும், சீக்கிரத்தில் அது தீர்ந்துவிடுகிறது.

எனவே குப்பையை கிளறி உணவு எடுப்பதை விட எங்களுக்கு வேறு வழியில்லை. இதனால் நோய் பரவும் ஆபத்து இருந்தாலும், அதைவிட பட்டினி நோய் தான் எங்களை அதிகம் வாட்டி வதைக்கிறது” என வேதனையும் விரக்தியுமாக கூறுகிறார்.

இது காசாவில் வசிக்கும் ஒரு பெண்ணின் நிலைமையில்லை. இஸ்ரேல் ராணுவத்தின் இடைவிடாத தாக்குதலால் காசாவில் வசிக்கும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் 2.3 மில்லியன் மக்கள் உணவு பஞ்சத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர்.

தடுக்கப்படும் உதவி லாரிகள்! People of Gaza searching for food in the garbage

கடந்த வாரம் காசாவிற்குள் உணவு பொருட்கள் ஏற்றிவந்த ஐ.நா. உதவி குழுக்களின் பல நூறு லாரிகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் கொள்ளையடிக்கப்பட்டும், இஸ்ரேலிய ராணுவக் கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலான லாரிகள் மக்களைச் சென்றடையவில்லை.

இந்த நிலையில் தான் பட்டினியால் வாடும் குழந்தைகளுக்காக, குப்பையில் உணவுத் தேட துவங்கியுள்ளனர் காசா மக்கள். இது அவர்களை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என ஐ.நா. அதிகாரிகள் கவலைத் தெரிவிக்கின்றனர். People of Gaza searching for food in the garbage

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share