ADVERTISEMENT

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் அபராதம்: அரசாணை வெளியீடு!

Published On:

| By Kalai

சாலைகளில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் அபராதம் விதிப்பதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

தமிழகத்தில் போக்குவரத்தில் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளை அரசு கொண்டு வருகிறது. விபத்துகளை தடுக்க போதையில் வாகனம் ஓட்டினால் மட்டுமல்ல, அவருடன் பயணித்தாலும் அபராதம் வசூலிக்கப்படும் என்ற புதிய விதி இன்று(அக்டோபர் 20) அமலுக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில், மக்கள் உயிரைப் பாதுகாக்கும் சேவையாற்றி வரும் பணியில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் வாகன பந்தயங்களில் ஈடுபட்டாலும்,  மாசு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினாலும்  10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.

ADVERTISEMENT

தேவையில்லாமல் தடை செய்யப்பட்ட இடங்களில், ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.

விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்ற அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கலை.ரா

நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு!

போதையில் இருப்பவருடன் பயணித்தாலும் இனி அபராதம்: அமலுக்கு வந்தது புதிய விதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share