புரதம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த வேர்க்கடலை சாட் குழந்தைகளுக்கேற்ற சிறந்த நொறுக்குத்தீனியாகும். மேலும் வைட்டமின் சி நிறைந்தது என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும். தசைகளை வலுவாக்கும் என்பதால் அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
வேர்க்கடலை – கால் கப்
மஞ்சள் தூள் – தேவையான அளவு
நறுக்கிய தக்காளி, வெள்ளரி – தலா அரை கப்
இஞ்சி, பச்சைமிளகாய், எலுமிச்சைச்சாறு – தலா கால் டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள், மிளகு தூள், உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையைத் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்க வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு, நன்றாக வெந்ததும் நீரை வடித்து, கடலையைத் தனியாக எடுத்துவைக்க வேண்டும். இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு, சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத் தூள், கடலை, வெள்ளரி, தக்காளி, எலுமிச்சைச் சாறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கிளறினால், வேர்க்கடலை சாட் தயார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…