மணிப்பூரில் அமைதி : அமித் ஷா உறுதி!

Published On:

| By Kavi

Peace in Manipur Amit Shah assured

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். Peace in Manipur Amit Shah assured

மணிப்பூரின் பாதுகாப்பு நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் இன்று (மார்ச் 1) உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா, மத்திய உள்துறைச் செயலாளர், புலனாய்வு அமைப்பின் இயக்குநர், ராணுவ துணைத் தலைவர், கிழக்கு கட்டளையின் ராணுவத் தளபதி, எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), அசாம் ரைபிள்ஸ் இயக்குநர் ஜெனரல், மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மணிப்பூரில் நீடித்த அமைதியை நிலைநாட்ட முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இது தொடர்பாக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.

2025 மார்ச் 8 முதல் மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்களின் தடையற்ற நடமாட்டம் உறுதி செய்யப்படும். இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மணிப்பூரின் சர்வதேச எல்லையில் நியமிக்கப்பட்ட நுழைவு முனையங்களின் இருபுறமும் வேலி அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும்.

மணிப்பூரை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒட்டுமொத்த வலைப்பின்னலும் தகர்க்கப்பட வேண்டும்” என்று கூறினார். Peace in Manipur Amit Shah assured

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share