படமா? நிஜமா? – காரில் கெத்தாக வலம் வந்த பவன்

Published On:

| By Monisha

ஆந்திராவில் சாலை விரிவாக்கத்திற்காக வீடுகள் இடிக்கப்பட்ட இடத்திற்கு ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் கார் மீது அமர்ந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் சினிமா மட்டுமல்லாது ஜனசேனா என்ற கட்சியின் தலைவராக அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது, பவன் கல்யாணின் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் அது எதோ ஒரு ஷூட்டிங் வீடியோ என்று பகிர்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ஆனால் உண்மையில் அது ஷூட்டிங் வீடியோ கிடையாது.

ஆந்திராவில் இப்டாம் என்ற பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையோரத்தில் இருந்த வீடுகளை ஆந்திர அரசு இடித்துள்ளது. வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகப் பவன் கல்யாண் மக்களை நேரில் சந்திக்கச் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

மக்களைச் சந்திக்கச் சென்ற பவன் கல்யாண் தனது காருக்குள்ளே அமராமல் காரின் மேற்கூரையின் மீது அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் பவன் கல்யாணின் ஆதரவாளர்கள், இருபக்கமும் தொங்கியபடியே ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

பவன் கல்யாணின் காரை பின்தொடர்ந்து, 10 கார்களில் அவரது ஆதரவாளர்கள் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். இந்த பயணத்தின் காட்சிகளை கேமரா மேன் வைத்துப் படப்பிடிப்பு போன்று ஷூட் செய்துள்ளனர்.

பவன் கல்யாணின் இந்த செயலால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பவன் கல்யாண் அப்பகுதிக்குச் செல்ல காவல்துறை அனுமதியும் மறுத்துள்ளது.

அனுமதியை மீறி அப்பகுதிக்கு வந்த பவன் கல்யாணை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், அவரது ஆதரவாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பிற்குப் பிறகு பவன் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார்.

கடந்த மார்ச் 14 ஆம் தேதி ஜனசேனா கட்சி உருவான தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு அந்த கிராமத்தில் அனுமதி வழங்கப்பட்டது தான் இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தான் பவன் கல்யாண் அந்த இடத்திற்குச் சென்றார் என்று பேசப்படுகிறது.

அங்கு சென்ற அவர் மக்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு ”அரசாங்கத்தின் நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
இந்நிலையில், பவன் கல்யாண் காரின் மேற்கூரை மீது அமர்ந்து பயணித்த வீடியோ வைரலாகி வருவதோடு ஒரு புறம் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

மோனிஷா

கோவை வழக்கில் ஆதாரங்கள் அழிப்பு : மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி

தெலங்கானா இடைத்தேர்தல் : பாஜக VS டிஆர்எஸ்… வெற்றி பெறப்போவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share