“‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறார்கள்” என்று ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் இன்று (மே 26) தெரிவித்துள்ளார். Pawan Kalyan criticises opposition parties
சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாஜக சார்பில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பவன் கல்யாண் கலந்து கொண்டார். Pawan Kalyan criticises opposition parties

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “தமிழ்நாடு எனக்கு கற்றுத்தந்த அனுபவங்கள் என்னுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக மாறியது. ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி நிறைய பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதனால் தவறான புரிதல்கள் உருவாக்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், இவிஎம் மெஷின் சூப்பர் என்று சொல்வார்கள். தோல்வி அடைந்தால் இவிஎம் மெஷினில் குளறுபடி நடந்துள்ளது என்பார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறார்கள்.
அந்தகாலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வந்தால் அது சூப்பர். அதுவே, இப்போது அதே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு அந்தால் அது மோசம். தெலுங்கில் இதனை, மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம் என்று சொல்வார்கள். அவர்கள் செய்தால் சரி, அதுவே நாம் செய்தால் தவறு.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் புதிதல்ல. 1950 – 1967 வரை இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடந்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவாகவும் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் முன்னாள் முதல்வர் கலைஞர் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் எழுதியுள்ளார். ஆனால், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சீர்திருத்தம் மட்டுமல்ல, பொருளாதார சீர்திருத்தம், நிர்வாக சீர்திருத்தம். முக்கியமாக நமது தமிழகத்திற்கு தேவையான சீர்திருத்தம். இது காலத்தின் கட்டாயம். எனவே, இதனை ஏற்றுக்கொள்வோம்” என்றார். Pawan Kalyan criticises opposition parties