நிலத்தடி நீரை அதிகரிக்க பேவர் பிளாக் சாலை: சென்னை மாநகராட்சி திட்டம்!

Published On:

| By Minnambalam

சென்னையில் நிலத்தடி நீரை அதிகரிக்க பேவர் பிளாக் சாலை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

பேருந்து தட சாலைகள் பெரும்பாலும் தார்ச் சாலைகளாகவும், உட்புற சாலைகள் தார்ச் சாலைகள் மற்றும் சிமென்ட் கான்கிரீட் சாலைகளாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் பேவர் பிளாக் சாலை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

இதன்படி 2.78 கி.மீ நீளத்துக்கு ரூ.1.71 கோடி செலவில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மணலி மண்டலத்தில் 10 சாலைகளில் 554 மீ நீளத்துக்கு ரூ.32 லட்சம் செலவிலும், ராயபுரம் மண்டலத்தில் 2 சாலைகள் 165 மீ நீளத்துக்கு ரூ.6 லட்சம் செலவிலும்,

ADVERTISEMENT

வளசரவாக்கம் மண்டலத்தில் 3 சாலைகளில் 219 மீ நீளத்துக்கு ரூ.19 லட்சம் செலவிலும், அடையாறு மண்டலத்தில் 3 சாலைகளில் 180 மீ நீளத்துக்கு ரூ.11.23 லட்சம் செலவிலும்,

பெருங்குடி மண்டலத்தில் 1662 மீ நீளத்துக்கு ரூ.101 லட்சம் செலவில் இந்தச் சாலைகள் அமைக்கப்படவுள்ளது.

இது குறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர், “மழை நேரங்களில் தார் சாலைகள் தண்ணீர் நிலத்தடியில் இறங்காது. சிமென்ட் கான்கிரீட் சாலைகளில் ஓரளவு தண்ணீர் இறங்கும்.

ஆனால், இந்த பேவர் பிளாக் சாலைகளில் நிலத்தடி நீர் முழுமையாக இறங்கும். எனவே, இதுபோன்ற சாலைகளை சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமைத்து நிலத்தடி நீர் அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிரடி ப்ளான்!

கிச்சன் கீர்த்தனா : கோதுமை தோசை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share