சிக்கனில் விதம் விதமான சுவையான உணவுகள் இருந்தாலும் சிக்கன் மசாலாவை விரும்பி சாப்பிடுபவர் பலருண்டு. அந்த சிக்கன் மசாலாவில் பாஸ்தாவையும் சேர்த்து இந்த பாஸ்தா சிக்கன் மசாலா செய்யுங்கள். வீட்டிலுள்ளவர்களை அசத்துங்கள். இந்த சிக்கன் மசாலா சாப்பாத்தி, பரோட்டாவுக்கு சிறந்த சைடிஷாக அமையும்.
என்ன தேவை?
பாஸ்தா – 200 கிராம்
சிக்கன் – 200 கிராம்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – இரண்டு
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
தனியா (மல்லி) தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – ஒன்று
லவங்கம் – 2
பிரிஞ்சி இலை – ஒன்று
ஏலக்காய் – 2
சீஸ் – ஒரு ஸ்லைஸ்
மிளகுத்தூள் – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து, இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் சிக்கனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி மூன்று நிமிடங்கள் வேகவைக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பின்னர், சிறிது மிளகுத்தூள், சீஸ் மற்றும் கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும். இறுதியாக, சிறிது எண்ணெயை ஊற்றி ஒருமுறை கலக்கி இறக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
