விரைவு ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த பயணி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்தவர் பாலமுருகன். 24 வயது இளைஞரான இவர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (அக்டோபர் 2) புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்தார்.
ரயில் பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து சென்றபோது, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்த சமயத்தில் இளைஞரின் கால் நடைமேடையில் மோதி கீழே விழுந்தார்.
ரயில் சென்ற வேகத்தில் நடைமேடையில் 150 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டு ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.
பாலமுருகனின் உடலை மீட்ட மாம்பலம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் தற்போது பாலமுருகன் ரயிலில் இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சியும் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ரயில் படிக்கட்டுகளில் நின்று/ அமர்ந்து பயணம் செய்வது, தொங்கிக் கொண்டு செல்வது, தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் மற்றும் புகைப்படம் எடுப்பது ஆகிய காரணங்களால் இளைஞர்கள் விலைமதிப்பற்ற உயிரை இழக்க நேரிடுகிறது.
இந்த நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
உயர்ந்து வரும் வணிக சிலிண்டர் விலை: ஓட்டல்களில் உணவு விலை அதிகரிக்கும் அபாயம்!
நடிகை சமந்தா குறித்து ஆந்திர அமைச்சர் பேசியது என்ன? கொந்தளிக்கும் திரையுலகம்