ரிலாக்ஸ் டைம்: பாசிப்பயிறு குழிப்பணியாரம்!

Published On:

| By Balaji

விடாதது மழை பெய்யும் சூழலில் சூடாக ஏதாவது சாப்பிட்டால் சுகமாக இருக்கும் என்று நினைப்பவர்களின் பெஸ்ட் சாய்ஸ் இந்தப் பாசிப்பயிறு குழிப்பணியாரம்.

**எப்படிச் செய்வது?**

மூன்று பச்சை மிளகாய், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். 200 கிராம் பாசிப்பயிறு, 50 கிராம் புழுங்கல் அரிசி, 25 கிராம் உளுந்து மற்றும் 25 கிராம் வெந்தயத்தை தனித்தனியாக நன்கு ஊறவைத்துக் கொள்ளவும். நன்கு ஊறியதைத் தனித்தனியாக கொரகொரப்பாக அரைத்து ஒன்றாகக் கலக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு புளிக்க விடவும். தேவையான அளவு எண்ணெயை வாணலியில் சேர்த்து சூடானதும் சிறிதளவு கடுகு, நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து நன்றாக கலந்து பணியாரமாக ஊற்றி எடுக்கவும்.

**சிறப்பு**

பச்சை பயிறு என்று அழைக்கப்படும் பாசிப்பயறை சாப்பிடுவதன் மூலமாக நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரதச்சத்தானது கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share