எலிக்கு பதிலாக கிளி: ஜோதிடர்கள் அரசுக்கு கோரிக்கை!

Published On:

| By Raj

கிளி ஜோதிடம் போல எலி ஜோதிடத்திற்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை எனவும் எனவே, கிளியை வைத்து கிளி ஜோதிடம் பார்க்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கிளி ஜோதிடர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Parrot astrologers request TN govt

பச்சைக் கிளிகளைப் பயன்படுத்தி நம் பெயரைச் சொல்லி, ஜோதிடர்கள் வைத்திருக்கும் சீட்டுகளில் ஒன்றை எடுக்கச் செய்து  அந்தச் சீட்டின் அடிப்படையில் ஜோதிடப் பலன்கள் சொல்வதே கிளி ஜோதிடம். Parrot astrologers request TN govt

முன்பெல்லாம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிளி ஜோதிடம் பார்ப்பது என்பது அதிக அளவில் இருந்து வந்தது. தற்போது வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பட்டியலிடப்பட்ட உயிரினங்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கிளி ஜோதிடத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கிளி ஜோதிடம் பார்த்து வந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கிளிக்கு மாற்றாக எலியை வைத்து ஜோதிடம் சொல்ல தொடங்கியுள்ளனர். அதன்படி, கிளிகளுக்கு பயிற்சி அளித்து ஜோதிடம் சொன்னது போல, தற்போது அவர்கள் கினி என்னும் வகையான எலிக்கு தங்களுக்கு விருப்பப்பட்ட பெயரை வைத்து, பயிற்சி அளித்து ஜோதிடம் சொல்லி வருகின்றனர்.

இருந்தபோதிலும் கிளி ஜோதிடம் போல இதற்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை, மக்கள் ஆர்வத்துடன் ஜோதிடம் பார்க்க வருவதில்லை எனவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிளி ஜோதிடர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கிளி ஜோதிடம் பார்க்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share