நாடாளுமன்ற பொது கணக்குக் குழு தேர்தல்: திருச்சி சிவா முதலிடம்!

Published On:

| By Kavi

நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் 7 உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக எம்.பி.திருச்சி சிவா அதிக வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

ஆண்டுதோறும் நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவிற்கு மக்களவையிலிருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அந்த வகையில் 7 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. இந்த தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதில் 8 பேர் போட்டியிட்டதில் திருச்சி சிவா எம்.பி. அதிகபட்சமாக 42 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக எம்.பி தம்பிதுரையும் 16 வாக்குகளுடன் பொது கணக்குக்குழுவுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

அவர்களைத் தவிர, பாஜகவின் எம்.பி. சுதான்ஷு திரிவேதி 34 வாக்குகளும், காங்கிரஸ் எம்.பி சக்திசிங் கோஹில் 31 வாக்குகளும், பாஜகவில் தேர்வான மேலும் இரண்டு எம்.பி.க்களான லஷ்மண் மற்றும் கண்ஷியாம் திவாரி ஆகியோர் தலா 29 வாக்குகளும் பெற்றுள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் 17 வாக்குகளை பெற்றுள்ளார்.

பிரியா

பயணிகளே உஷார்… பேருந்துகளில் பரவும் கொரோனா : ஆய்வில் அதிர்ச்சி!

மெஸ்ஸியின் அடுத்த புதிய சாதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share