நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: நான்கு மசோதாக்கள் தாக்கலாகிறது!

Published On:

| By Selvam

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடருக்கு முன்னதாக செப்டம்பர் 17-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

சிறப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம், சாதனைகள் குறித்து விவாதம் நடைபெற உள்ளது.

மேலும் தபால் அலுவலக மசோதா, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதா, அச்சு ஊடகங்கள் மற்றும் பதிவுகள் மசோதா, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா தாக்கலாகிறது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லாமல் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

செல்வம்

கலைஞர் மகளிர் உரிமை தொகை: மேல்முறையீடு செய்வது எப்படி?

டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்!

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share