6-ஆம் கட்ட தேர்தல்: 59.06% வாக்குகள் பதிவு!

Published On:

| By Selvam

நாடாளுமன்ற ஆறாம் கட்ட தேர்தல், பிஹார், ஹரியானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் இன்று (மே 25) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதல் வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாக்கு செலுத்தினர்.

அதிகபட்சமாக மேற்குவங்க மாநிலத்தில் 78.19 சதவிகிதமும், குறைந்தபட்சமாக ஜம்மு, காஷ்மீரில் 52.28 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தமாக 8 மாநிலங்களில் 59.06% வாக்குகள் பதிவாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மாலை 7.45 நிலவரப்படி…

பிஹார் – 53.30%

ஹரியானா – 58.37%

ஜம்மு காஷ்மீர் – 52.28%

ஜார்க்கண்ட் – 62.74%

டெல்லி – 54.48%

ஒடிசா – 60.07%

உத்தரபிரதேசம் – 54.3%

மேற்குவங்கம் – 78.19%

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அஜித்தை வியக்க வைத்த கங்குவா.. AK 64 இயக்குநர் சிவா?

நாடாளுமன்றத் தேர்தல்: தமிழகத்தின் முழு வாக்குப்பதிவு விவரங்கள் இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share