நாடாளுமன்ற 5-ஆம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி, 56.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (மே 20) தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் களம் பரபரக்கிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (ரேபரேலி), மத்திய அமைசசர்கள் ஸ்மிருதி இரானி ( அமேதி), ராஜ்நாத் சிங் ( லக்னோ), பியூஷ் கோயல் (மும்பை வடக்கு), தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா ( பாரமுல்லா) ஆகிய முக்கிய தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.
அதன்படி ஜார்க்கண்ட் (3), ஒடிசா (5), உத்தர பிரதேசம் (14), பிகார் (5), மகாராஷ்டிரா (13), மேற்கு வங்கம் (7), லடாக் (1), ஜம்மு, காஷ்மீர் (1) ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாலை 5 மணி நிலவரப்படி…
பிகார் – 52.35 %
ஜம்மு, காஷ்மீர் – 54.21%
ஜார்க்கண்ட் – 61.90%
லடாக் – 67.15%
மகாராஷ்டிரா – 48.66%
ஒடிசா – 60.55%
உத்தரபிரதேசம் – 55.80%
மேற்கு வங்கம் – 73% வாக்குகள் பதிவாகியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…