’பராசக்தி’க்கும் நெருக்கடி! தீ பரவட்டும் உட்பட ‘இந்தி’ எதிர்ப்பு வசனங்களுக்கு தடை! 52 இடங்களில் மியூட்- 27 இடங்களில் வார்த்தைகள் மாற்றம்!

Published On:

| By Mathi

Parasakthi Anti-Hindi Dialogues

சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்தி திணிப்புக்கு எதிரான 1965-ம் ஆண்டு மொழிப் போர் வரலாற்றை விவரிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் பல வார்த்தைகளை மாற்றவும் மியூட் செய்யவும் தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் நடிப்பில் உருவாகி உள்ளது ‘பராசக்தி’ திரைப்படம். 1965-ல் பொள்ளாச்சியில் இந்தி எதிர்ப்பு போரின் போது 250 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட மறைக்கப்பட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்த திரைப்படம்.

ADVERTISEMENT

இந்த படத்துக்கு U/A சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது.

மேலும் ‘பராசக்தி’ படத்தில்

ADVERTISEMENT
  • தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் முன்னரே 27 இடங்களில் வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன.
  • ‘தீ பரவட்டும்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘நீதி பரவட்டும்’ என மாற்றபட்டுள்ளது. இது அண்ணாவின் புகழ் பெற்ற நூலின் தலைப்பு.
  • “இங்கு யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் ஆள்கிறான் என்பதுதான் பொருள்” என்ற 22 விநாடி வசனம் நீக்கப்பட்டுள்ளது.
  • இந்தி அரக்கி; இந்தி என் வாழ்க்கையை அழித்தது என்கிற வசனம் நீக்கப்பட்டுள்ளது.
  • “இந்தி கத்துகிட்டு” என்ற வசனமும் நீக்கப்பட்டுள்ளது.
  • கொடும்பாவி கொளுத்தும் காட்சி நீக்கப்பட்டுள்ளது.
  • தபால் நிலையம் மீது சாணம் வீசும் காட்சி நீக்கப்பட்டுள்ளது.
  • இந்தி திணிப்பு எதிர்ப்பு வசனங்கள், முழக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன/ மியூட் செய்யப்பட்டுள்ளன.
  • அதேபோல 52 இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share