விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: பரனூரில் போக்குவரத்து நெரிசல்!

Published On:

| By Jegadeesh

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் காந்தி ஜெயந்தி, தசரா,ஆயுத பூஜை, மிலாடி நபி என தொடர் விடுமுறை நாட்கள் வந்தன. பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

இதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படை எடுத்தனர். சிறப்பு பேருந்துகளையும் அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது.

ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறையையொட்டி சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.

இதையடுத்து தற்போது தொடர்விடுமுறை மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறையும் முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

paranur toll gate traffic jam

இந்நிலையில், மக்கள் நேற்று பிற்பகல் முதலே சென்னைக்கு திரும்பத் தொடங்கினர்.

இதனால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.

அதுபோன்று பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

பரனூர் சுங்கச்சாவடியில் வார இறுதியில் விடுமுறை நாட்கள் முடிந்து சொந்த ஊர்களிலிருந்து திரும்பும் மக்களால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது என்பது வாகன ஓட்டிகளின் கவலையாக உள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கொடநாடு கொலை வழக்கு : யார் சொல்வது உண்மை?

மு.க.ஸ்டாலினை அரசியல் கடந்து வாழ்த்தும் தலைவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share