திரையரங்குகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கைத்தட்டலை அள்ளிய பறந்துபோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராம் இயக்கத்தில், நடிகர் மிர்ச்சி சிவா, நடிகை அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல், பாலாஜி சக்திவேல் ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் பறந்துபோ.
ரோட் டிரிப் ஜானரில் வெளிவந்து இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்தநிலையில் இப்படம் இன்று (ஆகஸ்ட் 5) ஜியோ ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாகி வருகிறது.

வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் ஓகே எந்த பேபி திரைப்படம் வெளியாகவுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நடித்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
சுரேஷ் கோபி நடிப்பில் உருவான ஜானகி. வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.
