Paralympics 2024: 29 பதக்கங்களுடன் இந்தியா வரலாற்று சாதனை – முழு பட்டியல்!

Published On:

| By christopher

Paralympics 2024: India sets historic record with 29 medals - full list!

பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28 அன்று கோலாகலமாக துவங்கிய 2024 பாராலிம்பிக்ஸ் தொடர், நேற்று (செப்டம்பர் 8) இரவுடன் வண்ணமயமாக நிறைவடைந்துள்ளது.

இந்த விளையாட்டு தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 18வது இடத்தை பிடித்து வரலாற்று சாதனை பிடித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்று 24வது இடம் பிடித்த இந்தியா, இம்முறை கூடுதலாக 10 பதக்கங்களுடன் 18வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த 29 பதக்கங்களில், 17 பதக்கங்களை இந்தியா பாரா-தடகளப் போட்டிகளில் வென்றுள்ளது. பாரா தடகள விளையாட்டுகளில் மட்டும், இந்திய வீரர், வீராங்கனைகள் 4 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

ADVERTISEMENT

அதற்கு அடுத்தபடியாக பாரா-பேட்மின்டனில் 1 தங்கம் உட்பட 5 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளியும், மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீ சிவன் மற்றும் மாரியப்பன் தங்கவேலு ஆகியோர் வெண்கலமும் வென்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதுவரை இல்லாத அளவாக, இந்த பாராலிம்பிக் தொடரில் அதிக பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, அதிக தங்கப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளது.

பாரீஸ் 2024 பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்தியர்களின் பட்டியல்:

தங்கப் பதக்கம் 

அவனி லெகாரா – மகளிர் 10மீ ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் எஸ்எச்1 (துப்பாக்கி சுடுதல்)

நிதேஷ் குமார் – ஆடவர் ஒற்றையர் SL3 (பேட்மிண்டன்)

ஹர்விந்தர் சிங் – ஆடவர் தனிநபர் ரீகர்வ் (வில்வித்தை)

சுமித் ஆன்டில் – ஆடவர் ஈட்டி எறிதல் F64 (தடகளம்)

தரம்பிர் – ஆடவர் கிளப் த்ரோ 51 (தடகளம்)

பிரவீன் குமார்  – ஆடவர் டி64 உயரம் தாண்டுதல் (தடகளம்)

நவ்தீப் சிங் – ஆடவர் ஈட்டி எறிதல் எப்41 (தடகளம்)

வெள்ளிப் பதக்கம்

மணீஷ் நர்வால் – ஆடவர் 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (துப்பாக்கி சுடுதல்)

துளசிமதி முருகேசன் – பெண்கள் ஒற்றையர் SU5 (பேட்மிண்டன்)

சுஹாஸ் யாதிராஜ்  – ஆடவர் ஒற்றையர் SL4 (பேட்மிண்டன்)

நிஷாத் குமார் – ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 (தடகளம்)

யோகேஷ் கதுனியா – ஆடவர் வட்டு எறிதல் F56 (தடகளம்)

அஜீத் சிங் – ஆடவர் ஈட்டி எறிதல் எப்46 (தடகளம்)

ஷரத் குமார் – ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 (தடகளம்)

சச்சின் கிலாரி – ஆடவர் ஷாட் புட் F46 (தடகளம்)

பிரணவ் சூர்மா – ஆடவர் கிளப்பில்  51 (தடகளம்)

வெண்கலப் பதக்கம்

மோனா அகர்வால் – மகளிர் 10மீ ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் SH1 (துப்பாக்கி சுடுதல்)

ரூபினா பிரான்சிஸ் –  மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (துப்பாக்கி சுடுதல்)

மனிஷா ராமதாஸ் – மகளிர் ஒற்றையர் SU5 (பேட்மிண்டன்)

நித்யா ஸ்ரீ சிவன் – மகளிர் ஒற்றையர் SH6 (பேட்மிண்டன்)

ராகேஷ் குமார் / ஷீத்தல் தேவி – கலப்பு அணி வளாகத்தில் திறந்த (வில்வித்தை)

கபில் பர்மர் – ஜூடோ ஆடவர் 60 கிலோ (ஜூடோ)

ப்ரீத்தி பால் –  மகளிர் 100மீ டி35 (தடகளம்)

ப்ரீத்தி பால் – மகளிர் 200மீ டி35 (தடகளம்)

தீப்தி ஜீவன்ஜி – மகளிர் 400 மீட்டர் டி20 (தடகளம்)

சுந்தர் சிங் குர்ஜார் – ஆடவர் ஈட்டி எறிதல்  எப்46 (தடகளம்)

மாரியப்பன் தங்கவேலு – ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 (தடகளம்)

ஹோகாடோ செமா – ஆடவர் ஷாட் புட் எஃப்57 (தடகளம்)

சிம்ரன் சிங் –  மகளிர் 200 மீட்டர் டி12 (தடகளம்)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகிழ்

போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: கலந்துகொள்வது எப்படி?

பொறியியல் கல்லூரிகள் ஒதுக்கீடு: எஸ்சிஏ பிரிவுக்கு நாளை தொடங்குகிறது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share