ஜவாஹிருல்லா வேண்டாம்… ஒரே குரலில் பாபநாசம் திமுகவினர்!

Published On:

| By Minnambalam Desk

திமுகவில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மாநிலத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் அந்தந்த மண்டல பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். Papanasam DMK Members against Jawahirullah

இந்த வகையில் கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வரும் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கொடுத்த ஃபீட்பேக் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

மே 14 ஆம் தேதி கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் அமைச்சரும் திமுகவின் முதன்மை செயலாளரும் டெல்டா மண்டல பொறுப்பாளரான கே.என்.நேரு.

கூட்டத்தில் மாவட்ட அமைச்சரான கோவி.செழியன், மாவட்ட செயலாளரான ராஜ்யசபா உறுப்பினர் கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Papanasam DMK Members against Jawahirullah

திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர், பேரூர் செயலாளர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் மட்டுமே இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தப்பட்ட போது அந்தந்த சட்டமன்றத் தொகுதிக்கு என ஏற்கனவே தலைமையால் நியமிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் அமர வைக்கப்பட்டனர்.

ஒவ்வொரு நிர்வாகியும் பேசுவதை குறிப்பெடுத்துக் கொள்ள இரண்டு சுருக்கெழுத்தர்கள் அதாவது ஸ்டேனோ அமர வைக்கப்பட்டிருந்தனர். மேலும் ‘ pen ‘ அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் அனைவரும், ‘வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம் தொகுதியில் திமுக தான் போட்டியிட வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்கக் கூடாது’ என்று ஒருசேர கோரிக்கை விடுத்தார்கள்.

அப்போது அமைச்சர் நேரு, ‘ஏன்யா நம்ம ஜவாஹிருல்லா பாய் உதயசூரியன்லதானே நின்னு ஜெயிச்சாரு?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நிர்வாகிகள் தங்களது வேட்டியின் திமுக கரையைக் காட்டி, ‘அமைச்சர் அண்ணே… நம்ம சின்னத்துல நின்னுட்டா போதுமா. கட்சிக்காரர்களை பார்க்கிறதே கிடையாது. முன்னாடியாவது வாரத்துல ஒரு நாள் வந்துட்டு இருந்தாரு. அப்புறம் அதுவும் இல்லாம போச்சு. இப்ப அவருக்கும் உடம்பு சரியில்லை. தொகுதி பக்கம் பெருசா வர்றது இல்ல.

அதனால மக்கள் கேள்விக்கு நாங்க தான் பதில் சொல்ல வேண்டி இருக்கு. நீங்க தலைவர் கிட்ட சொல்லிடுங்க. அடுத்த முறை பாபநாசத்தில் திமுக காரனே நின்னு ஜெயிக்கணும். மறுபடியும் கூட்டணிக்கு கொடுத்தா அது நல்லா இருக்காது’ என்று ஒரே குரலில் தெரிவித்திருக்கிறார்கள்.

பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எதிர் எதிர் கோஷ்டிகளைச் சேர்ந்த திமுகவினர் கூட இந்த விஷயத்தில் ஒற்றுமையாக குரல் கொடுப்பதை கவனித்துக் குறித்துக் கொண்டார் அமைச்சர் நேரு. Papanasam DMK Members against Jawahirullah

இதோ பாருங்க நீங்க சொல்ற அத்தனையும் ஒரு எழுத்து விடாமல் தலைவர் பார்வைக்கு கொண்டு போய் சேர்த்து விடுவேன் என்று நிர்வாகிகளுக்கு உறுதி கொடுத்தார் அமைச்சர் நேரு. Papanasam DMK Members against Jawahirullah

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share