ADVERTISEMENT

தனி தமிழ்நாடு விடுதலைக்காக போராடியவர்களுக்கு ‘சிறப்பு’ செய்த பண்ருட்டி வேல்முருகன்

Published On:

| By Mathi

TVK Velmurugan

தனித் தமிழ்நாடு விடுதலை கோரி போராடியவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., நிதி உதவி வழங்கி சிறப்பித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 71-வது பிறந்த நாள் நேற்று நவம்பர் 26-ந் தேதி உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனி தமிழ்நாடு, தமிழீழம் ஆகியவற்றின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் நிதி உதவி வழங்கி சிறப்பு செய்தார்.

ADVERTISEMENT

தமிழ்நாடு விடுதலை மற்றும் தமிழீழ விடுதலைக்காக போராடிய தமிழரசன், புலவர் கலியபெருமாள் குடும்பத்தினர், தேனிசை செல்லப்பா, தியாகு, அரங்க.குணசேகரன், பொழிலன், அணைக்கரை மாறன், ஆலப்பாக்கம் முருகேசன், தடா நல்லரசன், தமிழ் முகிலன், தெய்வமணி, உத்ராபதி, நடராஜன், இளங்கோ நம்பி உட்பட 15 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.15 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய வேல்முருகன், “இங்கே நாம் அழைத்திருப்பவர்கள் அனைவரும் தமிழ் தேசத்துக்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்கள். தமிழ்நாடு விடுதலைப் படை தமிழரசன், புலவர் கலியபெருமாளுடன் பயணித்தவர்கள்.. மாறன், ஆலப்பாக்கம் முருகேசன் என தோழர்கள் இங்கே இருக்கின்றனர். இந்த தோழர்களை உலகம் முழுவதும் அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் முதல் கட்டமாக ஊடகத் தோழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்.. இவர்கள், நமது போராளிகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பார்கள்” என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share