வேல்முருகனுக்கு எதிராக நேருவிடம் கொந்தளித்த பண்ருட்டி திமுகவினர்!

Published On:

| By Minnambalam Desk

Panruti DMK Members against TVK Velmurugan
Panruti DMK Members against TVK Velmurugan

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மண்டல பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என் நேரு மே 18ஆம் தேதி கடலூர் மேற்கு மாவட்டத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. Panruti DMK Members against TVK Velmurugan

கடலூர் மேற்கு மாவட்டத்தில் திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய நான்கு தொகுதிகள் உள்ளன. Panruti DMK Members against TVK Velmurugan

இவற்றில் திட்டக்குடியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.வி கணேசன் அமைச்சராக இருக்கிறார். நெய்வேலி திமுக சட்டமன்ற உறுப்பினராக சபா ராஜேந்திரன் இருக்கிறார்.

இவர்கள் இருவர் மட்டுமே திமுகவை சேர்ந்தவர்கள். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் அமைச்சர் நேரு தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வி கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் ஆகிய இரண்டு சட்டமன்ற பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொண்டனர். Panruti DMK Members against TVK Velmurugan

மற்றவர்கள் காங்கிரஸ் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என்பதால் கலந்து கொள்ளவில்லை. கூட்டம் காலை 10:30 மணிக்கு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேகமாக அரங்கத்துக்குள் வந்தார்.

அவரை கடலூரின் ஒரு பகுதி காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக கூடுதலாக நியமித்தது திமுக தலைமை. இதையடுத்து இந்த ஆய்வுக்கு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே அங்கே வந்து அமைச்சர் நேருவை சந்தித்தார்.

நேருவும் அமைச்சர் எம்.ஆர்.கே வுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இருவரும் அன்னியோன்யமாக சில நிமிடங்கள் உரையாடிய நிலையில் அதன் பிறகு எம்.ஆர்.கே அங்கிருந்து புறப்பட்டார்.

Panruti DMK Members against TVK Velmurugan

இதன் பின் கூட்டம் தொடர்ந்தது. மாவட்டத்தில் இருக்கக்கூடிய நான்கு சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளிடமும் அமைச்சர் கே.என் நேரு தனித்தனியாக கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

அப்போது மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஷ், “நெய்வேலி டவுன்ஷிப்பை போலவே இங்கே அடுத்ததாக இந்திரா நகர் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்திரா நகர் பகுதிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றை அமைத்து தந்தால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அது நமது அரசுக்கு மேலும் நற்பெயரை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்று ஆலோசனை தெரிவித்தார்.

தனது ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும் இரண்டு ஸ்டேனோகிராபர்களை அழைத்து வரும் அமைச்சர் நேரு இந்த கூட்டத்துக்கும் அவர்களை அழைத்து வந்திருந்தார். நேரு அவர்களை பார்த்ததும், ராஜேஷ் கேட்ட இந்த கோரிக்கையை உடனடியாக அவர்கள் எழுதிக் கொண்டனர். Panruti DMK Members against TVK Velmurugan

அடுத்ததாக பொதுக்குழு உறுப்பினர் அறிவு என்கிற அறிவழகன், “என்னுடைய தந்தை கலியமூர்த்தி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர். அவருடைய எஃப் ஐ ஆர் காப்பியை கூட இன்னமும் நான் பெருமிதமான பட்டயமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

கட்சியில் உழைப்பவர்களை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அது அமைச்சர் நேரு போன்றவர்கள் மண்டல பொறுப்பாளராக இருக்கும் போது இன்னும் கூடுதலாக நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நெய்வேலியில் அனல் மின் நிலையம் இருந்தாலும் இங்கிருக்கும் விவசாயிகள் மின்சாரத்துக்காக கஷ்டப்படுகிறார்கள். 230 மெகா வாட் துணை மின் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகியும் இன்னும் அது முடியவில்லை. Panruti DMK Members against TVK Velmurugan

அந்த மின் நிலையம் அமைந்தால் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்” என்று கூறினார். Panruti DMK Members against TVK Velmurugan

அப்போது பதில் சொன்ன அமைச்சர் நேரு, “மேல இருக்கிற ஒன்றிய அரசு நமக்கு எந்த விதமான நிதியும் கிடைக்க விடாமல் தடை விதிச்சிட்டு இருக்காங்க. இதே போல பிரச்சனை என் தொகுதியிலயும் இருக்கு. நம்முடைய முதலமைச்சர் தொடர்ந்து இதுக்காக தான் போராடிகிட்டு இருக்காரு” என்று அவருக்கு பதில் சொன்னார்.

இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்குமார் பேசும்போது, “இளைஞர் அணி நிர்வாகிகளை யாரும் கண்டு கொள்வதே இல்லை. எங்களுக்கும் சில விஷயங்களை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்று கோரிக்கை வைத்தார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், “ஏற்கனவே இந்த தொகுதியை கட்டிட தொழிலாளர் சங்கத்தின் பொன் குமாருக்கு கொடுத்தீர்கள் ஜெயிக்க வைத்தோம். இப்போது வேல்முருகனுக்கு கொடுத்தீர்கள் அவரையும் ஜெயிக்க வைத்தோம்.

இப்படி வேறு கட்சிக்காரர்களை ஜெயிக்க வைத்து திமுகவினருக்கு எந்த பயனும் இல்லை. வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆவது பண்ருட்டி தொகுதியை அக்மார்க் திமுக காரனுக்கு கொடுக்க வேண்டும். மற்ற கட்சி எம்எல்ஏக்களிடம் போய் நாங்கள் நிற்க முடியாது. ஏற்கனவே எம்பி யையும் காங்கிரசுக்கு கொடுத்து விட்டீர்கள். எம்எல்ஏவும் திமுக காரர் இல்லை. எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுக நிற்க வேண்டும்” என்று நேருவிடம் நேருக்கு நேராக கோரிக்கை வைத்தார்.

மேலும் தென்பெண்ணையாரை ஒட்டி அமைந்துள்ள கிராம மக்கள், ஒவ்வொரு மழைக்காலத்திலும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அல்லல்பட வேண்டி இருக்கிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுத்து தன் பெண்ணை ஆற்றின் கரைகளை பலப்படுத்தி தடுப்பணைகள் கட்ட வேண்டிய இடங்களில் விரைவில் கட்ட வேண்டும் என்றும் வெங்கட்ராமன் கோரிக்கை வைத்தார்.

நாடாளுமன்றமும் கூட்டணி கட்சிக்கு போய்விட்டது சட்டமன்றமும் கூட்டணி கட்சிக்கு போய்விட்டது திமுக காரங்களுக்கு என்று என்ன இருக்கிறது என்று மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துரைராஜும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நேருவிடம் புலம்பினார்.

அதேபோல விருத்தாசலம் நகர செயலாளர் தண்டபாணி, வருகிற சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் திமுக வே போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒவ்வொரு நிர்வாகியின் கருத்தையும் அருகே அழைத்து தனித்தனியே கேட்டுக்கொண்ட அமைச்சரும் மண்டலம் பொறுப்பாளருமான கே.என் நேரு, ‘உங்களையெல்லாம் பார்த்தாலே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நீங்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகள் கட்சி பிரச்சினைக்காக இல்லை. மக்களுக்காக வைத்தீர்கள். ஆக இந்த மாவட்டத்தில் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்பது உங்களுடைய மலர்ச்சியான முகத்தை பார்த்தாலே தெரிகிறது. இதனால் எனக்கும் மகிழ்ச்சி. நீங்கள் சொன்ன மக்கள் பிரச்சனைகளை தொகுத்து தலைவர் முதல்வரிடம் கொடுக்க இருக்கிறேன். அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பார். Panruti DMK Members against TVK Velmurugan

நம்பிக்கையோடு இருங்கள். மீண்டும் நமது தலைவரை முதல்வராக கடுமையாக உழைப்போம்” என சொல்லிக் கூட்டத்தை முடித்தார் கே.என் நேரு. Panruti DMK Members against TVK Velmurugan

Panruti DMK Members against TVK Velmurugan
Panruti DMK Members against TVK Velmurugan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share