விஜய் பிரசார இடம் அருகே தவெக தொண்டர் மயங்கி விழுந்ததால் பதற்றம்- VIDEO

Published On:

| By Mathi

Erode Vijay

ஈரோட்டில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் இடம் அருகே தவெக தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

ஈரோடு பெருந்துறை சரளையில் விஜய் பிரசார கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க அதிகாலை முதலே தவெக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

ADVERTISEMENT

தவெக தொண்டர்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இரும்பு தடுப்புகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இடத்தில் நாற்காலிகள் எதுவும் போடப்படவில்லை. இதனால் காலை முதலே தவெக தொண்டர்கள் கால்கடுக்க நின்று கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் பிரசார கூட்டம் நடைபெறும் இடத்துக்கு முன்னதாக, விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் தவெக தொண்டர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் அந்த தொண்டரை மீட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share