திண்டுக்கல் அருகே வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை மூட்டம் – அலறிய பயணிகள்!

Published On:

| By Minnambalam Desk

Vande Bharat Train

நெல்லையிலிருந்து இன்று ஜூலை 9-ந் தேதி காலை சென்னைக்குப் புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் திடீரென புகைமூட்டம் ஏற்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். Vande Bharat Train

நெல்லையிலிருந்து இன்று காலை 6.05 மணிக்கு கிளம்பிய வந்தே பாரத் ரயில் திண்டுக்கல் வந்தடைந்தது. பின்னர் திருச்சியை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த போது, திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி அருகே திடீரென ரயிலுக்குள் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ADVERTISEMENT

இதன் காரணமாக உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. ஏசியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பெட்டியின் உள்ளே புகைமூட்டம் ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக வந்தே பாரத் ரயில் புறப்பட்டது.

இந்த வந்தே பாரத் ரயிலில் புகைமூட்டம் ஏற்பட்ட பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு பயணிகள் ஓடி வந்து, ரயிலை நிறுத்த சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share