கிச்சன் கீர்த்தனா: பனீர் சீஸ் பால்ஸ்!

Published On:

| By Monisha

paneer cheese balls recipe in tamil

அதிக அளவு புரதச்சத்தும் குறைந்த அளவு சர்க்கரைச் சத்தும் உள்ள பனீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட இந்த சீஸ் பால்ஸ் ரெசிப்பி உதவும். இதைச் சூடாக தக்காளி சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

என்ன தேவை?

ADVERTISEMENT

துருவிய பனீர் – ஒரு கப்
துருவிய சீஸ் – ஒரு கப்
உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, தோலுரித்துத் துருவவும்)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – அரை கப்
சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்
ரவை – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கோட்டிங் செய்ய…
மைதா மாவு – 3 டீஸ்பூன்
பிரெட் தூள் – ஒரு கப்

பொரிக்க…

ADVERTISEMENT

எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

தேவையான பொருள்கள் அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். மைதா மாவைத் தண்ணீர் சேர்த்து நீர்க்கக் கரைத்துக்கொள்ளவும்.பிசைந்துவைத்துள்ள பனீர் கலவையை உருண்டைகளாகச் செய்து மைதா கரைசலில் முக்கியெடுத்து, பிரெட் தூளில் புரட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை `சிம்’மில் வைத்து, உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தலைவன் வடை, தொண்டன் முறுக்கு: அப்டேட் குமாரு

காசா மீது அணுகுண்டு? இஸ்ரேலிய அமைச்சர் சர்ச்சை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share