ஆண்டுதோறும் கோடை வருவது வழக்கமானதுதான் என்றாலும், அதை எதிர்கொள்ளவும் அதன் கடுமையிலிருந்து தப்பிக்கவும் சில, பல சிம்பிள் வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் போதும். விரத நாட்களில் பயன்படும் எளிமையான இந்தப் பானம், தாகத்தைத் தணிக்கும். இயற்கையான சர்க்கரை நிறைந்திருக்கும் வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம். வெல்லத்தில் இயற்கையான வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன. எனவே, வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது இந்த பானகம்.
என்ன தேவை?
- பொடித்த வெல்லம் – அரை கப்
- எலுமிச்சம்பழச் சாறு – 2 டீஸ்பூன்
- குளிர்ந்த தண்ணீர் – 3 கப்
- சுக்குப் பொடி – அரை டீஸ்பூன்
- ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
- துளசி இலைகள் – 2
எப்படிச் செய்வது?
வெல்லத்தை தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். எலுமிச்சம்பழச் சாறு, சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி எல்லாவற்றையும் நன்கு கலந்து, குளிர்ச்சியாகப் பரிமாறவும்.
