மீம் உலகின் முடி சூடா மன்னனை சந்தித்த அமைச்சர் பிடிஆர்

Published On:

| By Kavi

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மீம்ஸ் உலகின் முடி சூடா மன்னன் என்று அழைக்கப்படும் பிரபல நகைச்சுவை நடிகரை சந்தித்தது குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். palanivel thiyagarajan meet vadivelu

மாமன்னன் வெற்றிக்கு பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் அதற்கு முன்னதாக, பல ஆண்டுகளாக நடிப்பதற்கு வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைக்காத போதும், அவர் உச்சத்திலேயே தான் இருந்தார்.

காரணம், அவர் இல்லாத மீம்ஸ்களை பார்ப்பது அவ்வளவு கடினம். எந்த சூழ்நிலைக்குமான மீம்ஸ்களுக்கு வடிவேலுவின் சினிமா காட்சிகள் பொருந்தும்.

இந்தநிலையில் இன்று (பிப்ரவரி 6) தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நடிகர் வடிவேலுவை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தன்னிகரற்ற நகைச்சுவை திரைக்கலைஞர், இன்றளவும் மீம்(Meme) உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் எங்கள் மதுரை மண்ணின் மைந்தன் வைகைப்புயல் வடிவேலுவை விமான நிலையத்தில் சந்தித்து உரையாடியதில் நானும் அவரது ரசிகன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்” என்று புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. palanivel thiyagarajan meet vadivelu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share