வான் சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 7) சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ” இதே விமான சாகச நிகழ்ச்சி பல்வேறு இடத்தில் இதற்கு முன் நடைபெற்றுள்ளது. அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் தமிழகத்தின் திறமையற்ற முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுச் செயல்படாத காரணத்தினால் மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். பல பேர் இறந்துள்ளார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை நாங்கள் வண்மையாகக் கண்டிக்கிறோம்.
இனியாவது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு,இப்படிப்பட்ட லட்சக் கணக்கான மக்கள் கூடுகிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்பொழுது உளவுத்துறை மூலமாகச் சரியான தகவல்களைப் பெற்று, மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்துக்கொடுக்க வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்கு அரசுதான் பொறுப்பு ” என்று தெரிவித்தார்.
முன்னதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை லயோலா கல்லூரி முன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ” இதை அரசியல் ஆக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மெரினாவில் நடந்த உயிரிழப்புகள்… அரசியல் செய்யாதீர்கள் : அமைச்சர் மா.சுப்ரமணியன்
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… அஜித் ஷாலினியின் வைரல் வீடியோ!
Comments are closed.