எது மாதிரியும் இல்லாத புது மாதிரி உணவு வேண்டும் என்றுதான் இன்று பலரும் நினைக்கிறார்கள். அப்படிப் புதுவிதமாக என்ஜாய் செய்ய உங்களுக்கான அசத்தலான உணவுதான் கீரை அடையாகக் காட்சியளிக்கும் இந்த பாலக் தாலி பித். இந்த அடை வீட்டிலுள்ள அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
பாலக் கீரை – நறுக்கியது
கோதுமை மாவு – தலா ஒரு கப்
கடலை மாவு – அரை கப்
கம்பு மாவு, அரிசி மாவு – தலா கால் கப்
உப்பு, பச்சை மிளகாய்,
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
எண்ணெய் – தேவைக்கு
மஞ்சள், இஞ்சி, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
ஓமம் – சிட்டிகை
சர்க்கரை – அரை டீஸ்பூன்
தயிர் – அரை கப்
எப்படிச் செய்வது?
இஞ்சி, சீரகம், பச்சை மிளகாயை மிக்சியில் கரகரப்பாகப் பொடிக்கவும். கோதுமை மாவு, கடலை மாவு, கம்பு மாவு, அரிசி மாவு, கீரை, உப்பு, தயிர், சர்க்கரை, ஓமம், மிளகாய்த்தூள், அரைத்த பொடி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரொட்டி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு சிறிது எண்ணெய் தடவி மூடி அரை மணி நேரம் வைக்கவும். மாவை சிறிய உருண்டைகளாக்கவும். வாழை இலையில் மாவை வைத்து தட்டவும். சூடான தவாவின் மேல் போட்டு, இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு கரகரப்பாக வேகவைத்து எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : மக்னா மலாய் கறி
கிச்சன் கீர்த்தனா: கேஷு தம் புலாவ்
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை கைது? களத்தில் குதிக்கும் அமித் ஷா… பரபரப்புத் திருப்பங்கள்!