சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று (பிப்ரவரி 23) நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது. போட்டியை நடத்தும் நாடு இரு லீக் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி கண்டு வெளியேறியது அந்த நாட்டு ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது. சில ரசிகர்கள் அந்த நாட்டு வீரர்களை கடுமையாக சமூகவலைத் தளங்களில் தாக்கி வருகின்றனர். Pakistan trolled after loss
அதில் ஒரு பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “போட்டியை நடத்தும் உரிமையை பெற 2 வருடங்கள் போராடினோம். போட்டியை பாகிஸ்தானில் மட்டுமே நடத்த 3 மாதங்கள் போராட்டம் நடத்தினோம். போட்டியை நடத்த 4 வாரங்களுக்கு முன்புதான் ரெடியானோம். ஆனால், போட்டியில் பாகிஸ்தான் அணி 5 நாட்கள்தான் உயிர் வாழ்ந்தது” என்று சொல்லப்பட்டிருந்தது.Pakistan trolled after India loss
19 ஆம் தேதி ஓபனிங் செர்மனி… 23ஆம் தேதி குளோசிங் செர்மனி என்று மற்றொரு பதிவு சொல்கிறது.
‘பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஸ்ட்ரடஜி வெரி சிம்பிள். அது, விராட் கோலி சதம் அடிக்குமளவுக்கு ரன்கள் அடித்தால் போதுமானது என்பதுதான்” என்று இன்னொரு பதிவில் சொல்லப்பட்டிருந்தது.

மற்றொரு பதிவில் பாகிஸ்தான் அணியை குழி தோண்டி புதைப்பது போல புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் , நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் முற்றிலும் வெளியேறி விட்டதாக சொல்லி விட முடியாது. கொஞ்சம் வாய்ப்புள்ளது. அது எப்படி?
இன்று (பிப் 24) நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வங்கதேசம் வீழ்த்த வேண்டும். பின்னர், 27 ஆம் தேதி நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
தொடர்ந்து, மார்ச் 2 ஆம் தேதி நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெல்ல வேண்டும். அப்படியென்றால், நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் தலா 2 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது, பாகிஸ்தான் நியூசிலாந்தை விட அதிக ரன் ரேட் வைத்திருந்தால் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. Pakistan trolled after loss