பாகிஸ்தானுக்கு உளவாளிகளாக செயல்பட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷேசாத் என்ற நபர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். Pakistan Spy
Operation Sindoor ராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் பாகிஸ்தான் உளவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபரான ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த ஜோதி மல்ஹோத்ரா, ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடந்த பஹல்காமுக்கும் சென்று தமது யூடியூப்பில் வீடியோக்களைப் பதிவிட்டிருந்தார். பாகிஸ்தானுக்கும் சென்று அந்த நாடு அமைதியாக இருப்பதாக பாராட்டி இருந்தார் ஜோதி மல்ஹோத்ரா.
இதேபோல தமிழகத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் மீதும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த வரிசையில் ஒடிஷா மாநிலம் புரியைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர் தற்போது விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கிறார். ஹரியானா ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் ஒடிஷா புரி யூடியூபர் சிக்கி இருக்கிறார்.
இந்த வரிசையில் உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்த ஷேசாத் என்ற நபர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டுக்கு அடிக்கடி சென்று வந்த ஷேசாத், இந்தியாவின் பாதுகாப்பு நிலைகள் தொடர்பான முக்கிய தகவல்களை அந்நாட்டு அதிகாரிகளிடம் கொடுத்தார் என்