பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, பாகிஸ்தான் விளையாடிய டி20 தொடர்கள் மற்றும் இந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமே பயிற்சியாளராக பணியாற்றினார். பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் அவர் சொன்ன மாற்றங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், பாகிஸ்தான் வீரர்களுக்கும், கேரி கிர்ஸ்டனுக்கும் இடையே கெமிஸ்ட்ரியும் ஒத்துப் போகவில்லை.
பாகிஸ்தான் அணிக்கு உயர் செயல்பாட்டு திறன் பயிற்சியாளராக டேவிட் ரெய்டு என்பவரை நியமிக்க வேண்டும் என கேரி கிர்ஸ்டன் கோரிக்கை வைத்தார். இதையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, அவர் பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். கிரிஸ்டன் பயிற்சியாளராக இருந்த இந்த 6 மாதங்களில் பாகிஸ்தான் அணி எந்த ஒரு ஒருநாள் போட்டி தொடரிலும் விளையாடவில்லை.
கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒருநாள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் ஒரு போட்டிக்கு கூட பயிற்சி அளிக்காமல் பதவி விலகிய ஒரே பயிற்சியாளர் இவர்தான். அந்த அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு டார்ச்சர் செய்துள்ளது.
தற்போது கேரி கிரிஸ்டனுக்கு பதிலாக ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த உலகக் கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டியில் இதுவரை ஆடவில்லை. நவம்பர் 4 ஆம் தேதி மெல்பெர்னில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வதுதான் உலகக் கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் விளையாடும் முதல் ஒருநாள் போட்டி ஆகும்.
கேரி கிரிஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போதுதான் கடந்த 2011 ஆம் அண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் உலகக் கோப்பையில் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கொடுக்குறது 70 ஓவா… இதுக்கு டாய்லெட் இப்படிதான் இருக்கும்!- அமெரிக்க பெண்ணுக்கு இந்தியர்கள் பதிலடி!