பஞ்சாப் வயல்வெளிகளில் பாகிஸ்தான் ஏவுகணை சிதறல்கள்!

Published On:

| By Minnambalam

Pakistan Missile part

நாட்டின் எல்லை மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் இமாச்சலபிரதேசத்தில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நீடிக்கிறது. ஜம்முவில் இன்று அதிகாலையிலும் இடைவிடாத பயங்கர வெடி சப்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன; பஞ்சாப் எல்லை கிராமங்களின் வயல்வெளிகளில் இந்திய ராணுவத்தால் இடைமறித்து அழிக்கப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணைகளின் பாகங்கள் சிதறிக் கிடந்தன.

ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து சரமாரியாக டிரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்தியது பாகிஸ்தான். அத்துடன் ஏவுகணைகளையும் அடுத்தடுத்து வீசியது பாகிஸ்தான். மேலும் போர் விமானங்களையும் தாக்குதலில் ஈடுபடுத்தியது பாகிஸ்தான். ஆனால் பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட டிரோன்கள், 8 ஏவுகணைகள், 3 போர் விமானங்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக அழித்துவிட்டது.

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் விடிய விடிய வெடிகுண்டு சப்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் சரமாரியாக எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தி வருவதால் எல்லை கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. Pakistan Missile part

பஞ்சாப் வயல்வெளிகளில் சிதறல்கள் Pakistan Missile part

ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்ல எல்லை மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப்பிலும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டது பாகிஸ்தான். இந்த முயற்சிகள் அனைத்தையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துவிட்டது. இந்திய ராணுவம் அழித்த ஏவுகணைகளின் பாகங்கள், பஞ்சாப் எல்லை கிராமங்களின் வயல்வெளிகளில் சிதறிக் கிடந்தன. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து காவல்துறையினரும் பணிக்கு திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அனைத்து ஐபிஎல் போட்டிகளும் ரத்து?

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா உக்கிரமான பதிலடியைத் தந்து வரும் நிலையில், எஞ்சிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்வது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று முடிவை அறிவிக்க உள்ளது. இதுவரை 67 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

Pakistan Missile part - America

அமெரிக்கா நடுநிலை

இதனிடையே, இந்தியா- பாகிஸ்தான் இடையேயான யுத்தத்தில் அமெரிக்கா யாரையும் ஆதரிக்காது; நடுநிலைதான் வகிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share