பாகிஸ்தான் விமான நிறுவனத்தை விற்க முடிவு!

Published On:

| By christopher

pakistan airlines coming to sale

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை விற்கப் போவதாக பாகிஸ்தான் அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை (Pakistan International Airlines) நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்கி வரும் பாகிஸ்தான் எண்ணெய் நிறுவனம், தனது விநியோகத்தை நிறுத்தி உள்ளது.

ADVERTISEMENT

பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட எரிபொருளுக்கான தொகை அதிக அளவில் நிலுவையில் இருப்பதால், தொடர்ந்து எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனம் ரூ.750 பில்லியன் அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளதே கடன் தொகையை செலுத்த முடியாததற்குக் காரணம் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதன் காரணமாக நேற்று முன்தினம் 29 உள்நாட்டு விமான சேவை மற்றும் 48 வெளிநாட்டு விமான சேவையை பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனம் நிறுத்தியது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

நான்கு வெளிநாட்டு விமான சேவை மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது. லாகூரில் இருந்து டொரோன்டோ, கோலாலம்பூர், இஸ்லாமாபாத்தில் இருந்து பெய்ஜிங், இஸ்தான்புல் ஆகிய நான்கு சேவைகள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது என பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால், அதை தனியாருக்கு விற்க அரசு கடந்த மாதம் முடிவெடுத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்நிறுவனத்தை விற்கப்போவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

வேலைவாய்ப்பு : உளவுத் துறையில் பணி!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share