பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா இன்று (மே 8) இரவு சுட்டு வீழ்த்தியது. Pakistan fires 8 missiles
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா மே 7ஆம் தேதி அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தி 9 தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்தநிலையில் நேற்று இரவு பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த ஏவுகணையை அனுப்பியதாகவும், அது வான்வழியிலேயே இந்தியா செயலிழக்கச் செய்ததாகவும் இந்திய ராணுவம் கூறியது.
இவ்வாறு நாட்டில் போர் பதற்றம் சூழ்ந்திருக்கும் நிலையில் இன்று மாலை முதல் ஜம்மு காஷ்மீரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று ராணுவம் அறிவுறுத்தியது.
இந்தசூழலில் பாகிஸ்தான் ஏவுகணைகளை ஏவி ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த முயன்றது.
அவ்வாறு, தாக்க வந்த பாகிஸ்தானின் 8 ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழித்தாக இந்திய ராணுவம் தற்போது கூறியுள்ளது.
குப்வாராவில் கடும் சண்டை நடந்து வருவதாகவும் தகவல் வருகின்றன.
தொடர்ந்து பாகிஸ்தான் 2 ஜேஎஃப் – 17 ரக போர் விமானங்களை அனுப்பியது. அதனையும் இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது.
ரஜோரியில் பகுதியில் பற்ந்து வந்த ட்ரோன்களையும் இந்தியா தகர்த்தெறிந்துள்ளது. Pakistan fires 8 missiles
