ஓ… இருந்த இடத்தில் இருந்தே கட்சி மாறுவது இப்படித்தானா?

Published On:

| By Kumaresan M

துபாயில் நேற்று (பிப்ரவரி 23) நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 241 ரன்கள் மட்டுமே அடித்தது. தொடர்ந்து, விளையாடிய இந்தியா நிதானமாக ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.  Pakistan fan change to India jersey

இந்த சமயத்தில் துபாய் மைதானத்தில் நடந்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. மைதானத்தில் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு போட்டியை பார்த்து கொண்டிருந்தார்.

விராட் கோலி நிலைத்து நின்று ஆட தொடங்கியதும் பாகிஸ்தானுக்கு வெற்றி இனி கிடைக்காது என்பதை அறிந்த அந்த ரசிகர், தான் அணிந்திருந்த பாகிஸ்தான் ஜெர்சி மீது இந்திய அணி ஜெர்சியை அணிந்து கொண்டார். இதை பார்த்த அங்கிருந்த மற்றொரு ரசிகர்… ஏய் என்ன திடீர்னு அணி மாறுறியா ? என்று கேலியாக சிரித்தபடி கேட்டார்.  Pakistan fan change to India jersey

இதை பார்த்த அங்கிருந்த அனைத்து ரசிகர்களும் சிரித்து மகிழ்ந்தனர். இந்த காட்சியை பார்த்ததும் ‘இருந்த இடத்திலேயே இருந்து கட்சி மாறும் திறமை எனக்கு ஒருத்தனுக்குதான் உண்டு ‘ என்கிற வடிவேலு பட காமெடிதான் நினைவுக்கு வந்தது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

பாகிஸ்தான் அணியின் தோல்வியை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்ட அந்த ரசிகர் பாராட்டுக்குரியவர்தான்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share